ஆர். மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி
சரத்குமார், கதிர், ஹரேஷ் பெராடி, பிரேம், அச்யுத குமார்
ஆகியோர் நடிப்பில், புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில், கடந்த
வருடம் ‘விக்ரம் வேதா’ படம் வெளியானது.

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாதவன்
போலீசாகவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ்
சினிமாவில் பெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தில் விஜய்
சேதுபதியின் நடிப்பு வெகுவாக எல்லோராலும்
பாராட்டப்பட்டது.

இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது. இப்படத்தில்
விஜய் சேதுபதியின் வில்லன் கேரக்டர் பிடித்துபோகவே
ஷாருக்கான் ஹிந்தியில் வில்லனாக நடிக்க முடிவு
செய்திருந்தார்.

இதற்கிடையில், படத்தயாரிப்பு நிறுவனம் ஷாருக்கானை
மாதவன் வேடத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டனராம்.
மேலும், கதையில் மாற்றங்கள் செய்யவும் முடிவு
செய்யப்பட்டது.

இதனால், படத் தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷாருக்கானுக்கும்
இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்படத்திலிருந்து
ஷாருக்கான் விலகியதாகக் கருதப்படுகிறது.