தெறி சூப்பர் ஹிட்டுக்கு பின் விஜய் நடித்துள்ள படம் பைரவா. பரதன் இயக்கியுள்ள இந்த படத்தில் சுரேஷ் கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். பொங்கல் அன்று வெளியாக உள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த செய்திகள் சூடுபிடித்துள்ளன. அட்லி இயக்கும் இந்த படத்தில் 3 நாயகிகள் நடிக்க உள்ளதாக தெரிகிறது.

ஜில்லா,துப்பாக்கி படத்தில் நடித்த காஜல் அகர்வால் ஒரு நாயகியாகவும், கத்தி,தெறி படத்தில் நடித்த சமந்தா ஒரு நாயகியாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றாவது  நாயகியாக ஜோதிகா நடிக்க உள்ளதாக செய்திகள் தற்போது பரவி வருகின்றன. ஏற்கெனவே குஷி,திருமலை படங்களில் விஜயுடன் ஜோதிகா ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.