விஜயுடன் மோதும் பார்த்திபன்

வருகிற பொங்கல் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய  விருந்தாகவே அமைய உள்ளது.விஜய் நடிக்கும் பைரவா, ஜெய் நடிப்பில் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் புருஸ்லீ ஆகிய படங்கள் வெளியாக இருந்தன. இப்போது இந்த பட்டியலில் பார்த்திபனும் சேர்ந்துகொண்டார்.

சாந்தனு நடிப்பில் பார்த்திபன் இயக்கியுள்ள படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. பார்த்திபன் படங்கள் என்றாலே ஏதாவது புதிய முயற்சி மட்டுமின்றி வித்தியாசமான திரைக்கதையும் நிச்சயம் உண்டு. அவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கதை திரைக்கதை வசனம் இயக்கம் படமே இதற்கு உதாரணம். இவரது படமும் பொங்கல் பட்டியலில் இணைந்ததால் பலத்த போட்டி எழும் என்பதில் சந்தேகமே இல்லை.

சினிமா விரும்பிகளுக்கு இந்த பொங்கல் எஞாய் பொங்கல்தான்