இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் அவரை தேசிய நடிகராக மாற்றியது மட்டுமின்றி அவரை ஒரு அரசியல் தலைவராகவும் அவரது ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் ஆளும் அரசு கூட மத்திய அரசுக்கு அடிபணிந்து இருக்கும் நிலையில் விஜய்யின் மெர்சல் வசனங்கள் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் அம்மாவாக ‘மெர்சல்’ படத்தில் நடித்த கோவை சரளா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘விஜய்யின் பொறுமைக்கும், நிதானத்திற்கும் அவருக்கு மிகப்பெரிய ஒரு அந்தஸ்தும், பதவியும் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார். அவர் தமிழக முதல்வர் பதவியையே மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது அவருடன் கோவை சரளா நடித்துள்ளார். அதற்கு பின்னர் விஜய்யுடன் தற்போதுதான் ‘மெர்சல்’ படத்தில் நடித்துள்ளதாகவும், விஜய் முன்பைவிட தற்போது அதிக மெச்சூரிட்டியுடன் இருப்பதாகவும் கோவை சரளா தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.