இளையதளபதி விஜய்யும், தல அஜித்தும் தங்களுடைய ரசிகர்களை முழு திருப்தி செய்ய வேண்டும் என்பதற்காகவும், மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கு என்பதற்காகவும் தான் படங்களில் நடித்து வருகின்றனர்.

அவ்வாறு நடிக்கும்போது சில சமயம் ஒருசில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போகலாம், ஆனால் அவர்களுடைய உழைப்பு உண்மையானது

இதை மனதில் வைத்து விமர்சனம் செய்பவர்கள் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனம் செய்பவர்கள் ஒரு படத்தை தயாரித்து இயக்கினால்தான் அந்த வலி புரியும் என்று பிரபல பாடலாசிரியர் மற்றும் பாடகர் அருண்காமராஜ் கூறியுள்ளார்.