விஜய் இதுவரை எதுவுமே பேசாதது ஏன்? பிரபல பத்திரிகையாளர்

‘மெர்சல்’ பிரச்சனை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் ரஜினி, கமல் முதல் கிட்டத்தட்ட அனைத்து திரையுலகினர்களும் மெர்சல் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துவிட்ட நிலையிலும் இன்னும் விஜய் இதுகுறித்து வாய் திறக்காதது ஏன் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இன்று நடந்த தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் தன்னை காப்பாற்றி கொள்ளவே வாய்திறக்காமல் மெளனமாக இருப்பதாகவும், கோவையில் மோடியை பார்த்த பின்னர் விஜய் இன்று வரை மோடியை எதிர்த்து எந்த ஒரு குரலும் கொடுக்கவில்லை என்றும் தன்னுடைய நன்மைக்காகவே எடப்பாடி பழனிச்சாமியை விஜய் போய் பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

தன்னை மட்டுமே காப்பாற்றி கொள்ளும் எண்ணம் உள்ள ஒருவரை எப்படி ஒரு அரசியல் கட்சி தலைவராக மக்கள் ஏற்று கொள்வார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்