இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் இன்று கோடி கோடியாய் வசூலை குவித்தாலும் ரிலீசுக்கு முந்தைய நாள் அதன் தயாரிப்பாளர் லேபிற்கு கட்ட வேண்டிய ரூ.40 கோடிக்காக திணறியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விஜய், தான் பெற்ற சம்பளத்தில் இருந்து ரூ.5 கோடியை திருப்பி அளித்துள்ளார். இந்த பணத்தால்தான் தயாரிப்பாளர் ‘மெர்சல்’ படத்தை பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் செய்ய முடிந்தது.

சரியான நேரத்தில் விஜய் செய்த இந்த உதவியால் தயாரிப்பாளர் நெகிழ்ந்து போனாராம். விஜய்யின் இந்த உதவி குறித்து அவர் தனது நண்பர்களிடம் பெருமையாக கூறி வருகிறாராம்.