‘ லைகா புரொடக்ஷன்’ தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘செக்கச்சிவந்த வானம்’.

தற்பொழுது, விஜய்சேதுபதியின் ‘ரசூல் கதாபாத்திர’ மேக்கிங் விடியோ இணையத்தில் வெளியாகி மிரட்டி வருகிறது.

இதையடுத்து ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கும் ‘ 96’ படமும் முடிந்துள்ளது. பாலாஜி தரணின் ‘ சீதக்காதி’ , தியாகராஜன் குமாராஜாவின்  ‘சூப்பர் டீலக்ஸ்’, தெலுங்கில் சிரஞ்சீவியின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் ‘ பேட்ட’ என சற்றும் இடைவெளியில்லாமல் தொடர்ந்து படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி .இதைத்தொடர்ந்து, விஜய் சேதுபதிக்குக் காத்திருக்கிறது பல படங்கள்.

இதற்கிடையிலும், ஒரு புதிய படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண காந்த் படத்தின் கதையை கேட்டதுமே உடனே நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கேரக்டருக்காக தனது தோற்றத்தையும் மாற்ற இருக்கிறாராம். வெங்கட கிருஷ்ண காந்த், இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.