ஏ.ஆர்.முருகதாஸ் கதை, இயக்கத்தில் உருவாகி 2014-ஆம் ஆண்டு வெளியானது ‘கத்தி’. இப்படத்தை ‘லைகா புரெடக்ஷன்’ நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்நிறுவனத்திற்கு இதுதான் முதல் படம்.

இப்படத்தில் விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இதில், விஜய் இரட்டைவேடத்தில் நடித்திருந்தார். பல சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.

தண்ணீர் இல்லாத காரணத்தால் ஏற்படும் விவசாயத்தின் பாதிப்பையும், அதனால், விவசாயிகள் படும் இன்னல்களையும் இப்படம் உணர்த்தி இருக்கிறது.

தண்ணீரின் அவசியமும், விவசாயமும், விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படம் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையில் ‘கத்தி’ படத்தினை, ‘லைகா புரெடக்ஷன்’ தயாரிப்பு நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இதனால் விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.