விஜய் பாராட்டிய ‘விவேகம்’ டீசர்

இளையதளபதி விஜய்யின் ரசிகர்களும், தல அஜித்தின் ரசிகர்களும் ஃபேஸ்புக், டுவிட்டரில் மோதிக்கொண்டாலும், உண்மையில் விஜய்யும், அஜித்தும் நெருங்கிய நண்பர்கள் என்பது சம்பந்தபட்ட இருவரின் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை

அதுமட்டுமின்றி விஜய் நடித்த படத்தை அஜித் பாராட்டுவதும், அஜித் படத்தை விஜய் பாராட்டுவதும் ரெகுலராக நடந்து வரும் ஒன்று.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்து யூடியூபில் சாதனை செய்த அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டீசரை பார்த்து விஜய் பாராட்டியுள்ளதாகவும், இது சினிமாத்துறையின் ஆரோக்கியத்திற்கான வழிகாட்டி என்றும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ‘விவேகம்’ மற்றும் ‘மெர்சல்’ படங்களின் எடிட்டர் ரூபன் தெரிவித்துள்ளார். மேலும் ‘விவேகம்’ படத்தின் ‘காதலாட’ பாடல் அருமையாக இருப்பதாக ‘மெர்சல்’ இயக்குனர் அட்லி பாராட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.