விவேகம் படத்தின் டீசர் வெளியீடு – அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி

vivegam teaser

தல அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை அப்படத்தின் இயக்குனர் சிவா அறிவித்துள்ளார்.

நடிகர் அஜித் தற்போது, இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்ற அஜித்தின் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலாக ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படத்தின் டீசர் வீடியோ அஜித்தின் பிறந்த நாளான கடந்த மே 1ம் தேதி வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிப்போனது.

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில், விவேகம் படத்தின் டீசர் வருகிற 18ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.