லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான ‘சண்டக்கோழி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகமாக ‘சண்டக்கோழி 2’ உருவாகியுள்ளது. விஷாலுக்கு இது 25வது படமாகும்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரன், கஞ்சா கருப்பு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி தயாரித்துள்ள இப்படத்தினை லைகா புரொடக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை (அக்.18) ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஷால்திருட்டு விசிடி ஒழிக்கும் முயற்சியில் 10 திரையரங்குகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனை கண்டித்து, திரையரங்க உரிமையாளர்கள் மீது உரிய விசாரணையின்றி நடவடிக்கை எடுத்ததாகவும், அதனால் விஷாலின் ‘சண்டக்கோழி 2’ படத்தை நாளை வெளியிடமாட்டோம் என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் படம் நாளைக்கு திரைக்கு வருவதில் சிக்கல் ஏதேனும் வருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.