தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவியேற்ற விஷால், முதலில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒழிப்ப்தே தனது பணி என்று சூளுரைத்தார். ஆனால் இன்று வரை தமிழ் ராக்கர்ஸ் இருக்கும் இடத்தை அவரால் நெருங்க கூட முடியவில்லை. வழக்கம்போல் ரிலீஸ் ஆன முதல் நாளே புதிய திரைப்படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளங்களில் வந்து கொண்டுதான் உள்ளது

இந்த நிலையில் அப்பாஸ் அக்பர் என்ற இளம் இயக்குனரின் இயக்கத்தில் சமீபத்தில் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தை தயவுசெய்து ஒரு மாதம் கழித்து தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்த்தில் போடுங்கள் என்று இயக்குனர் வேண்டுகோள் விடுத்தார். இவரது வேண்டுகோள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று வரை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இருந்த சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் லிங்க் தற்போது நீக்கப்பட்டுள்ளது. விஷாலின் மிரட்டலுக்கு பணியாத தமிழ் ராக்கர்ஸ், இளம் இயக்குனருக்கு வேண்டுகோளை நிறைவேற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.