நடிகர் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த அடுத்த நிமிடமே அவர் தனது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. குறிப்பாக இயக்குனர் சேரன் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்கள் நேற்று சென்னை-செங்கல்பட்டு விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதாக அறிவித்தார். சேரனின் கோரிக்கை தன்னை நோக்கியும் திரும்புவதற்கு முன்பே அவர் தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

ஞானவேல்ராஜாவின் ராஜினாமா விஷாலுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை போலவே விஷாலும் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று சேரன் குழுவினர் தற்போது உரத்த குரலுடன் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விஷாலுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.