நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று மாலை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் வருமான வரி சோதனை நடத்தியதாக வந்த தகவல் உண்மையல்ல என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை சோதனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  நடிகர் விஷால் காலுான்றும் சின்னத்திரை நிகழ்ச்சியின் 2-வது புரொமோ

சோதனைக்கு பின்னர் அக்டோபர் 27ஆம் தேதி விஷால் வருமான வரித்துறை அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஷால் கூறியபோது, ‘இதுவொரு வழக்கமான சோதனையே. நான் சரியாக வருமான வரி கட்டி வருவதால் இதுகுறித்து பயப்பட தேவையில்லை. ஒருவேளை இந்த சோதனை உள்நோக்கம் கொண்டதாக இருந்தால் அதை சந்திக்க தயார்’ என்று கூறினார்.