ரஜினி, கமல் போல் இல்லாமல் அதிரடியாக ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அரசியலில் குதித்த விஷால் இன்று வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார்.

வேட்புமனுவை தாக்கல் செய்தவுடன் நேராக ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்ற விஷால் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில் விஷால் தனது வேட்புமனுவில் தனக்கு விசில் சின்னம் வேண்டும் என்று கேட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதே சின்னத்தை டிடிவி தினகரனும் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் கமிஷன் இந்த சின்னத்தை யாருக்கு வழங்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்