நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட சற்றுமுன்னர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர்களில் ஒருவராகிய ஞானவேல்ராஜாவும் தேர்தல் ஒன்றில் போட்டியிடவுள்ளார். ஆனால் அவர் போட்டியிடவுள்ளது விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் என்பது குறிப்பிடத்தக்கது.

நடைபெறவுள்ள சென்னை மற்றும் செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் தற்போதைய தலைவர் அருள்பதியை எதிர்த்து தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் K.E. ஞானவேல்ராஜா போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் ஆர்.கே.நகரில்லும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஞானவேல்ராஜா விநியோகிஸ்தர் சங்கத்தேர்தலிலும் போட்டியிடவுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.