நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் திரையுலகினர் மத்தியில் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு நடிகர் சரத்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். சிங்கம் குகையில் இல்லாத போது கமல், அரசியல் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள சரத்குமார், விஸ்வரூபம் பட வெளியீட்டின் போது ஓடி ஒளிந்தது ஏன்? என்றும் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.

மேலும், ‘கருத்துக்களை கூறிவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஓடி ஒளிந்து கொள்பவன் நான் இல்லை’ என்றும் அவர் கூறியுள்ள சரத்குமார், அரசியலில் கமல்ஹாசனால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார்.