அஜித் சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சிகள் கசிந்துள்ளதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் விஸ்வாசம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
‘விஸ்வாசம்’ ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் டிரெண்ட் ஆனது. வரும் பொங்கலுக்கு திரைப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அஜித் வில்லன்களோடு மோதும் காட்சிகள் வெளியே கசிந்துள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிங்க பாஸ்-  சர்கார் வசூலை முறியடிக்குமா விஸ்வாசம்...?