தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று அப்பபகுதி மக்கள் கடந்த சில நாட்களாக கடுமையாக போராடி வரும் நிலையில் இந்த ஆலை தற்காலிகமாக பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொள்ள நாளை கமல்ஹாசன் தூத்துகுடி செல்லவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இன்று ரஜினிகாந்த் இந்த டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.