ஷாஜகானுக்கு பிறகு இப்ப தான்! 15 வருஷம் ஆச்சு…

05:10 மணி

விஜய் பட இயக்குனர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

Loading...

விஜய் நடித்த ‘ஷாஜகான்’ படத்தை இயக்கியவர் ரவி. இப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு பிறகு ரவி எந்த படமும் இயக்கவில்லை. இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரவி புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார்.

இவர் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி முடிந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்தவுள்ளனர். இப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.இப்படத்திற்கு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இந்த வருடத்தின் இடையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com