விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் ஷாருக்கான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும், ஒரு பாடல் காட்சி மற்றும் கால்பந்து போட்டியை பார்க்கும் ஒரு சிறப்பு தோற்றத்தில் அவர் நடிக்க இருக்கிறார் என வித விதமான செய்திகள் வெளிவந்தது. ஆனால், தற்போது பிகில் படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், இப்படத்தில் திமிர், கொம்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த விஜயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர், இந்திய கால்பந்து அணியில் 2000ம் ஆண்டு முதல் 2004ம் வரை கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.