நேற்றையப் போட்டியின் போது இந்திய ரசிகர்கள் ஆஸி வீரர் ஸ்டீவ் ஸ்மித்தைக் கேலி செய்ததை அடுத்து விராட் கோஹ்லி ரசிகர்களை அன்பாக கண்டித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணி அனைத்து வகையிலும் சிறப்பாக செயல்பட்டு 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்யும் போது ருசிகரமான சம்பவம் நடந்தது.

இதையும் படிங்க பாஸ்-  இது என்னடா பெரியாருக்கு வந்த சோதனை - வைரலாகும் அழகிரி பேனர்

விராட் கோஹ்லி சிறப்பாக விளையாண்டதை அடுத்து அவரது விக்கெட்டைக் கைப்பற்ற ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை அங்குமிங்கும் மாற்றினார். அதனைக் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களைப் பார்த்து கோபமான கோஹ்லி ஓவர் இடைவேளையில் சைகையால் ‘ ஸ்மித்தைக் கிண்டல் செய்யாதீர்கள் . கைதட்டி உற்சாகப்படுத்துங்கள்’ எனக் கண்டித்தார். கோஹ்லியின் செய்கையைப் பார்த்த ஸ்மித் அவரைப் பாராட்டி கைக் கொடுத்தார்.

இதையும் படிங்க பாஸ்-  ஒரு விரல் புரட்சி - விஜய் ஓட்டுப்போடும் புகைப்படங்கள் செம மாஸ்...

இந்த வீடியோ சமூகவலைதளங்களி வேகமாகப் பரவி வருகிறது.
https://twitter.com/ICC/status/1137777943667707907