Connect with us

செய்திகள்

ஹாலிவுட் பிச்சை வாங்கனும்…அதிரடி ஆக்‌ஷனில் சாஹோ டீசர்..

Published

on

Saaho Teaser video – தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பாகுபலி படத்திற்கு பின் நடிகர் பிரபாஸ் தெலுங்கு மட்டுமில்லாமல் கோலிவுட், பாலிவுட் என அனைத்து திரையுலகிலும் புகழடைந்துள்ளார். எனவே, அவர் அடுத்து நடித்து வரும் சாஹோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடித்துள்ளார். அருண் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சுஜீத் இயக்கியுள்ள இப்படம் ரூ.300 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லரில் ஹாலிவுட்டுக்கு நிகரான சண்டை காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டிரெய்லரை பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் சாஹோ டீசர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending