
virat kohli introducing in cinema
விராட் கோலி, டிரெய்லர் தி மூவி, ஹீரோ, புதிய போஸ்டர்,Virat
Kohli,Trailer the movie,Hero, New poster
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த
வருடம் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து
திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது நடைபெறும் ஆசிய கிரிக்கெட்
தொடரில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ‘டிரெய்லர் தி மூவி’ திரைப்படத்திலும்
ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குக் காரணம், விராட்கோலி இன்று தனது ட்விட்டர்
பக்கத்தில் வெளியிட்டுள்ள சூப்பர் ஹீரோவாக நிற்கும்
போஸ்டர்தான்.
விராட் கோலியின் இந்த புதிய போஸ்டர் சமூக
வலைதளங்களில் ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது.
விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், ’10 வருடங்களுக்குப்
பின்னர் மீண்டும் ஒரு அறிமுகம். என்னால் காத்திருக்க
முயவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
விராட்கோலியின் இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த
உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Another debut after 10 years, can't wait! 😀 #TrailerTheMovie https://t.co/zDgE4JrdDT pic.twitter.com/hvcovMtfAV
— Virat Kohli (@imVkohli) September 21, 2018