தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களான கவுண்டமணி, விவேக், சந்தானம் உள்பட பலர் ஹீரோ வேடங்களில் நடித்து வரும் நிலையில் பழம்பெரும் காமெடி நடிகர்களில் ஒருவராகிய ஜனகராஜூம் தற்போது ஹீரோ வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தர்ம அவதாரம்’ என்ற படத்தில் ஜனகராஜ் ஹீரோவாகும், அவருடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவுள்ளனர். விஜய்ஸ்ரீ என்ற இயக்குனர் இயக்கும் இந்த படம் ஒரு மிடில் கிளாஸ் தந்தைக்கு ஏற்படும் சமூக கோபம் தான் கதை என்று கூறப்படுகிறது.

ஒரே ஷெட்யூலில் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிபபி வரும் மார்ச் மாதம் ஊட்டியில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.