தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 100 நாள் ஆகிவிட்டதை அடுத்து அஜித் ரசிகர்கள் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிட்டாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தின் ஒருசில வீடியோ காட்சிகளை டுவிட்டரில் பதிவு செய்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அஜித்தின் விவேகம் டுவிட்டரில் உலக அளவில் ஒருசில மணி நேரம் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது