திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வீட்டில் தனியாக இருந்த மாணவியை இலங்கையை சேர்ந்த 36 வயதான உதயன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த அகதிகள் முகாமை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். தேர்வில் தோல்வியடைந்ததால், மறு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவி தனது அக்கா வீட்டில் தங்கி டியூசன் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்ததை தெரிந்துகொண்ட உதயன் என்ற 36 வயதான இலங்கையை சேர்ந்த நபர் வீட்டுக்குள் புகுந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார் உதயன்.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி தனது அக்காவிடம் தைரியத்துடன் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் உதயனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.