கோவை, சின்னியம்பாளையத்தில் 15 வயது சிறுவனுடன் 13 வயது சிறுமி வீட்டை விட்டு ஓடிச் சென்றது பரபரப்புகளை உருவாக்கியுள்ளது.

கோவையில் உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள மில்லில் வேலைப் பார்த்து வருகிறார் அந்த தகப்பன். இவருக்கு 13 வயதில் பெண் ஒருவர் உள்ளார். அவர் வேலைப்பார்க்கும் அதே மில்லில் பிகாரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனும் வேலைப்பார்த்து வருகிறான். இவனுக்கும் அந்த சிறுமிக்கும் எப்படியோ பழக்கமாகி உள்ளது. இந்த பதின் பருவ ஈர்ப்பை இருவரும் காதல் என நம்பியுள்ளனர்.

இதையறிந்த அவரது பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் நேற்று காலை முதல் அந்த பெண் மாயமாகியுள்ளார். விசாரித்ததில் அந்த பீகார் பையனும் காணாமல் போனது தெரியவரவே, இருவரும் ஓடிப் போனது தெளிவானது. அந்த சிறுவன் பீகார் செல்ல ரயிலில் டிக்கெட் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து பீகார் போலிஸுக்குத் தகவல் கொடுத்த தமிழக போலிஸ் அவர்களைப் பீகாரில் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.