ஹீரோயின்களை மையப்படுத்தி பப்ளிசிட்டி பார்ப்பதில் அட்லீ கில்லாடி. தனது முதல் படமான ராஜா ராணிக்கு நயன்தாராவையும் அவரது இமேஜையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பயன்படுத்திக் கொண்டார். நயன்தாரா – ஆர்யாவுக்கு ஒரு டம்மி கல்யாணமே நடத்திக் காட்டிவிட்டார். படமும் ஓரளவு பிழைத்துவிட்டது. இப்போது மீண்டும் விஜய்யுடன் இணையும் புதிய படத்திலும் அதே உத்தியைத்தான் அவர் கையிலெடுத்திருக்கிறார்.

இந்த முறை ஜோதிகா. திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வந்துள்ள ஜோதிகா ஏற்கெனவே 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார். இப்போது விஜய்-அட்லீ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கப் போகிறார். ஏற்கெனவே விஜய்யுடன் குஷி, திருமலை போன்ற படங்களில் நடித்தவர் ஜோதிகா. விஜய்யுடன் மீண்டும் ஜோதிகாவை ஜோடி சேர்ப்பதன் மூலம் பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் கிளம்பும் என்பது அட்லீயின் கணக்கு. பார்க்கலாம்!