கோவையில் 14 வயது சிறுமியை 3 ஆண்டுகளாக தந்தையும்,2 சித்தப்பாக்களும்  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை தெலுங்குபாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில்  குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு எனும் நிகழ்ச்சியை குழந்தைகள் பாதுகாப்பு மையம் நடத்தியது. அதில் மாணவர்களுக்கு நல்ல தொடுதல் எது, கெட்ட தொடுதல் எது, ஒருவர் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும், அந்த விஷயங்களை யாரிடம் சொல்லவேண்டும் உள்ளிட்ட பல விஷயங்கள் சொல்லி கொடுக்கபட்டிருந்தது.

அதில் பங்கேற்ற ஒரு 14 வயது சிறுமி , குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளிடம் ஒரு திடிக்கிடும் தகவலை கூறினார்.அதில் கடந்த 3 ஆண்டுகளாக தன் தந்தையும்,தன் 2 சித்தப்பாக்களும்  பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார்.

இதனையடுத்து,சிறுமியின் புகாரின் பேரில் ,கோவை செல்வபுரம் போலீஸ் அதிகாரிகள் சிறுமியின் தந்தை ,சித்தப்பாவை கைது செய்துள்ளனர்.காணாமல் போன மற்றோரு சித்தப்பாவை வலைவீசி தேடி வருகின்றனர்.இச்சம்பவம் கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.