கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியம்,
அல்லாலிகவுண்டனுார் பகுதியில் வசித்து வருபவர்
இளஞ்சியம். இவருக்கு பாலசுப்ரமணியம் (15) மற்றும் நந்தினி
(5) என இரு குழந்தைகள் உள்ளனர்.

அக்கிராமத்தில் நடந்த திருட்டுச் சம்பவங்களுக்கு
பாலசுப்ரமணியம்தான் காரணம் என்று கூறி ஊர் மக்கள் சிலர்
அவனை கட்டி வைத்து அடித்து கொன்ற சம்பவம்
அப்பகுதினிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலசுப்ரமணியம் 8-ஆம்வகுப்பு வரை மட்டுமே படித்து,
அதற்கு மேல் படிக்காமல் ஊர் சுற்றி வருவதாக தெரிகிறது.
இக்கிராமத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று
வந்திருக்கிறது. இந்த திருட்டில், பாலசுப்ரமணியனுக்கும்
தொடர்புள்ளதாக ஊர் மக்கள் முன்னதாகவே
சந்தேகப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  இரண்டரை வயது குழந்தை - இந்த தாய்க்கு எப்படிதான் மனசு வந்ததோ?

இந்நிலையில், நேற்று வரவு பாலசுப்ரமணியன் வீட்டிற்கு
அருகில் உள்ள வீட்டில் செல்போன் திருடு போயிருந்தது.
இவ்வாறு தொடர்ந்து பக்கத்து வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள்
நடந்ததையொட்டி, பாலசுப்ரமணியன்தான் அந்த திருட்டுச்
சம்பவங்களை செய்திருக்க வேண்டும் என்று நினைத்துள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  ஓரின சேர்கைக்குக்கு மறுப்பு? - டிக்டாக் வீடியோவில் கலக்கிய சிறுவன் படுகொலை

அதனால், அந்தச் சிறுவனை சந்தேகப்பட்ட ஊர் பொதுமக்கள்
அவனது வீட்டில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பாலசுப்பரமணியன் ‘நான் திருடவில்லை’ என்று கூறியுள்ளான்.
ஆனால் அதை ஏற்காத பொதுமக்கள் நீதான் திருடியிருப்பாய்
என்று கூறி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளான். இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்த
வெள்ளியணை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று, பாலசுப்ரமணியனின் உடலை கைப்பற்றி
உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 5 பேரை
காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  போலீஸ் கண்காணிப்பில் விஜய் சேதுபதி ? அதிர்ச்சி தகவல்

திருட்டு சம்பவத்தின் சந்தேகத்தால், 15வயது சிறுவனை ஊர்
மக்கள் சிலர் அடித்து கொன்றது, அப்பகுதி மக்களிடையே
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.