15 வயது சிறுமி ஒருவர் 19 வயது சிறுவனை காதலித்து வீட்டை வீட்டு ஓடி இருவரும் தனியாக வசித்து வந்த சம்பவம் தாய்லாந்தில் நடந்துள்ளது.

தாய்லாந்தின் பாங்காங்கை சேர்ந்த கம்பிபாட் என்ற 15 வயது சிறுமி 19 வயதான க்ரோகட் என்ற சிறுவனை காதலித்து வந்துள்ளார். இரண்டு வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் பிரபல சேட்டிங் செயலியின் மூலம் அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டுப்பாடம் செய்வதற்கு நண்பர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார் சிறுமி. ஆனால் வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சிறுமியை காணவில்லை என காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் சிறுமி 19 வயது சிறுவன் ஒருவனுடன் லால் பராவோ நகரில் ஒன்றாக வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை கடத்தி வந்ததாக 19 வயது சிறுவன் கரோகட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் இருவரும் காதலித்து ஒன்றாக வாழ்வதற்காகத்தான் வீட்டை விட்டு ஓடிவந்துள்ளனர் என்பது தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீசார் பெற்றோர்களிடம் ஒப்படைத்து அறிவுரைகளை கூறினர்.