Connect with us

செய்திகள்

16 பெற்று பெருவாழ்வு வாழ்க..என்பதை தவறாக எண்ணி 17-வது பிரசவத்துக்கு தயாரான பெண்..

Published

on

16 பெற்று பெருவாழ்வு வாழ்க..என்பதை தவறாக எண்ணி 17-வது பிரசவத்துக்கு தயாரான பெண்..

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முதலில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற பிரசாரம் முழங்கியது. தற்போதைக்கு, ஒரு குழந்தையே போதும் என்று வலியுறுத்தப்படுகிறது. பிரதமர்
மோடியும் மக்கள் தொகை பெருக்கம் பற்றி கவலையை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில்,

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் அதாவது 2027-ல் முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் சில தம்பதியர் பல குழந்தைகளை பெற்றெடுப்பதில் சாதனை
படைப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர்

16 குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு தற்போது 17-வது பிரசவத்திற்காக தயாராகியுள்ளார்.

பீட் மாவட்டம் மஜால்காவ் தாலுகா கேசபுரி கிராமத்தை சேர்ந்த பெண் லங்காபாய் காரத். அங்குள்ள மாநகராட்சி மருத்துமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்தபோது தான், அவர் 17-வது குழந்தையை பிரசவிக்க இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

லங்காபாய் காரத் முதன் முதலில் கர்ப்பமாகிய போது மருத்துமனைக்கு  வந்து முதல் குழந்தையை  பெற்றெடுத்துள்ளார்.

 

அதன்பின்னர் பலமுறை கர்ப்பமாகிய அவர் ஒருமுறை கூட மருத்துமனை பக்கம் தலைகாட்டவில்லை. அவர் அடுத்தடுத்து 15 பிரசவத்தையும் வீட்டிலேயே முடித்து விட்டார்.

இதனால் அவரது பிரசவ கதை பற்றி வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில் 17-வது குழந்தையை பெற்றெடுக்க தயாரான அந்த பெண் வயிறு வலி காரணமாக  மருத்துமனைக்கு வந்ததாக மாநகராட்சி மருத்துமனைக்கு டாக்டர் ஒருவர் தெரிவித்தார். 7 மாத கர்ப்பிணியான அந்த பெண்ணும், வயிற்றில் வளரும் சிசுவும் நலமாக இருப்பதாகவும் அந்த டாக்டர் தெரிவித்தார்.

38 வயதான லங்காபாய் காரத்துக்கு தற்போது 11 குழந்தைகள் உள்ளனர். மற்ற 5 குழந்தைகள் இறந்து
விட்டதாக தெரியவந்துள்ளது. அவர் இதுவரை 20 தடவை கர்ப்பமடைந்ததும், 3 தடவை கருச்சிதைவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

16 பெற்று பெருவாழ்வு வாழ்க… என்று திருமணத்தின்போது பெரியோர்கள் ஆசி வழங்குவது உண்டு.

ஆனால் லங்காபாய் காரத் 16 செல்வத்துக்கு பதில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து 17-வது பிரசவத்துக்காக காத்திருக்கிறார். இந்த தடவை பிரசவத்துக்காக நிச்சயம் மருத்துமனையில் சேர வேண்டும் என்று டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

0

அரசியல்20 mins ago

தை பொறந்தால் வழிபொறக்கும் தொண்டர்களுக்கு சூசக பதில் சொன்ன ரஜினி…?

அரசியல்40 mins ago

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு நன்றி கூறிய கார்த்திக் சிதம்பரம்…!

செய்திகள்5 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்5 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்6 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்6 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்16 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending