தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றியதன் மூலம், இந்த வழக்கின் தீர்ப்பு வர காலதாமதம் ஆகியுள்ளது. இதனால் தாங்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் தாக்கல் செய்த தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சரை மாற்றவேண்டும் என ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களையும் அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் தகுதிநீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றனர் 18 பேரும்.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடிக்கு கொடி பிடித்துக்கொண்டே குழி பறிக்கும் அதிகாரிகள்: தினகரன் அட்டாக்!

முதலில் தனி நீதிபதி விசாரித்துவந்த இந்த வழக்கு இரண்டு நீதிபதிகொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதன் மூலம் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது காலத்தை இழுத்தடிப்பதற்காகத்தான் என புரிந்துகொண்ட தினகரன் ஆதரவு 18 பேரும் விரைவில் நீதிமன்றத்தை நாடி தங்கள் வழக்கை வாபஸ் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தினகரன் ஆதரவு தங்க தமிழ்ச்செல்வன் கூறும்போது, வரும் திங்கட்கிழமை தான் கொடுத்த வழக்கை மட்டும் வாபஸ் பெற உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடி தொகுதியில் எடப்பாடிக்கு எதிரான வீதி நாடகம்: அமர்க்களப்படுத்தும் தினகரன்!

நீதிமன்றத்தை நம்ப தயாராக இல்லை. என்னுடைய தொகுதிக்கு எல்எல்ஏ வேண்டும் என அறிவித்து விட்டு இடைத்தேர்தல் என்னுடைய தொகுதியில் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். இது என்னுடைய நிலைப்பாடு, மற்ற எம்எல்ஏக்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது என்றார்.

இதையும் படிங்க பாஸ்-  நயன் விஷயத்தில் அதிகம் பேசிய விக்னேஷ் சிவன் - நஷ்ட ஈடு கேட்டு வழக்கு

தங்க தமிழ்ச்செல்வனை போல் மற்ற எம்எல்ஏக்களும் கூடிய விரைவில் தகுதி நீக்க வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அடுத்தகட்ட தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து நாம் ஏற்கனவே 18 எம்எல்ஏக்களும் ராஜினாமா?: எடப்பாடியை வீழ்த்த தினகரன் எடுத்திருக்கும் ஆயுதம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் குறிப்பிட்டது போலவே நடக்க ஆரம்பித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் தினகரனின் மாஸ்டர் பிளான் அவருக்கு கைகொடுக்குமா என்பதை.