சந்தானம் நடித்து இன்று வெளியாகியுள்ள தில்லுக்கு துட்டு 2 படத்தை நெட்டிசன்கள் ஆகா ஓஹோவென புகழ்ந்து வருகின்றனர்.

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள ‘தில்லுக்கு துட்டு2’ இன்று வெளியாகியுள்ளது. இப்படம் இன்று காலை முதல் காட்சி பார்த்த பலரும் டிவிட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒப்பனிங் பாடல் இல்லை. போரடிக்கும் சண்டைக்காட்சிகளோ, தேவையில்லாத பஞ்ச வசனங்களோ இல்லை. காமெடி அத்தனையும் சூப்பர். சிரிப்பை அடக்க முடியவில்லை. அதிலும், ஒரு கதவு தொடர்பான காட்சி இருக்கிறது.. யப்பா. சிரிச்சி முடியல என பிரபல யுடியூப் விமர்சகர் பிரசாந்த் டிவிட் செய்துள்ளார்.

மேலும், நான் கடவுள் ராஜேந்திரனும், சந்தானும் செம காம்போ. ஜாலி பண்ணியிருக்காங்க.. 2 நிமிடங்களுக்கு ஒரு முறை சிரித்துக்கொண்டே இருப்பீர்கள் எனவும் அவர் டிவிட் செய்துள்ளார்.

சந்தானம் இஸ் பேக்.. பைசா வசூல் காமெடி.. 2 பாடல்கள் சேர்த்து படம் 2 நிமிடம் மட்டுமே ஒடுகிறது. அது பெரிய பலம். சிரிப்புக்கு கேரண்டி.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்

அதேபோல், சந்தானத்தின் வழக்கமான காமெடி.. டைமிங். நன்றாக இருக்கிறது. முதல் 20 நிமிடங்கள் போரடிக்கிறது. 2வது பாதியில் நிறைய காமெடி இருக்கிறது. புதியாக ஒன்றுமில்லை என ஒருவர் டிவிட் செய்துள்ளார்.