துபாயில் 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், நாயகி எமி ஜாக்ஸன், வில்லன் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தை தான் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.2.0 படத்தின் கதை பற்றி இயக்குனர் ஷங்கரிடம் கேட்ட போது இந்த படத்தின் கதை பற்றி அவர் மறைமுகமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கும் மனிதனுக்கும் உள்ள காதல் அதனால் வரும் பிரச்சனைகள் பற்றி கூறப்பட்டிருக்கும், அது போல 2.0வில் ஒரு மெஷினுக்கும்-மெஷினுக்கும் காதல் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியின் குட்புக்கில் சசிகுமார் - குவியும் பாராட்டுக்கள்