ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் வெளியான இன்றே தமிழ்ராக்கர்ஸிலும் வெளியானது.

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘2.0’ திரைப்படத்தில் எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷ்ய குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக  வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படம் செம.. இப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை.. கிராபிக்ஸ் அபாரம்.. விஸ்வல் ட்ரீட்… ஹாலிவுட் படம் பார்த்தது போல் இருக்கிறது. கலக்கல் தலைவா… சிறந்த கிளைமாக்ஸ் காட்சி.. என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படத்தை பார்த்த பலரும், இப்படி ஒரு தமிழ் படம் இதுவரை பார்த்ததில்லை. இனிமேல் பாக்கப்போவதும் இல்லை.. இப்படி ஒரு கதையை எப்படி ஷங்கர் யோசித்தார் என்றே தெரியவில்லை என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். வரலாற்றில் ஒரு புள்ளியை ஷங்கர் இட்டுள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாய் இருந்து வரும் ஆன்லைன் பிரைவசி ‘தமிழ்ராக்கர்ஸ்’,தற்போது 2.0 படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என நீதிமன்றம் கடுமையாக எச்சரித்த போதிலும் தமிழ்ராக்கர்ஸ் இப்படி செய்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.