ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் சிறந்த ஒலிக்கலைஞராக அறியப்பட்டவர் ரசூல் பூக்குட்டி, தொடர்ந்து இளையராஜா இசையமைத்த பழசிராஜா உள்ளிட்ட படங்களில் சிறந்த ஒலி அமைப்போடு படங்களுக்கு, பாடல்களுக்கு மிக்ஸிங் செய்து திரையுலகில் சிறந்த மிக்ஸிங் மற்றும் ஒலிக்கலைஞராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து ரஹ்மான் இசையமைக்கும் பல படங்களில் சவுண்ட் மிக்ஸிங் செய்யும் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் மிக்ஸிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.