மிகப்பெரிய பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படம் ரசிகர்களை கவர்ந்து
உள்ளதா என்பதை பார்ப்போம். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்,இயக்கத்தில் மிரட்ட
வந்துள்ளது 2.0 படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், லைகா புரொடக்ஷன் என மிகப்பெரிய பிரபலங்கள் ஒன்றிணைந்த இந்த படமானது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தான் உள்ளது என படம் பார்த்து வந்தவர்கள் சொல்வதிலிருந்து தெரிகிறது.

கிராபிக்ஸ் காட்சிகளில் ஷங்கரின் கைவண்ணம் மின்னுகிறது. மேலும் நவீன உலகத்தில் செல்போன் பயன்படுத்துவதில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். முதல் காட்சியில் செல்போன் டவரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும் அக்ஷய்குமார் என தொடங்குகிறது. அதன்பின் செல்போன்கன் எல்லாம் காணாமல் போகிறது. இது எப்படி நடக்கிறது என கண்டுபிடிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் செல்போன் உரிமையாளர்களும், தொலைபேசித்துறை அமைச்சரும் இறந்து விடுகிறார்கள். இதனால் சிட்டி உதவியை நாடுகிறார்கள். அதன்பின் நடக்கும் அக்ஷய்குமாரின் நாச வேலைகளை எப்படி ரஜினி டெக்னாலஜி மூலம் முறியடிப்பது மீதிக்கதை.

செல்போன்கள் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் தான் பறவைகள் இனம் அழிய தொடங்கியது. மேலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் அளவுக்கு அதிகமான போட்டியால் செல்போன் டவர்களில் அதிக ரேயேஷன்களின் கதிர்வீச்சால் அதிகளவில் பாதிப்பு ஏற்படுகிறது. இதை அறிந்து கொண்ட அக்ஷய்குமார் செல்போன்கள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற கருத்தை கூறி போராடி வருகிறார். இந்த செய்தியை மக்களிடமும், அரசாங்கத்திடமும், நீதிமன்றத்திலும் தெரியபடுத்தி அதற்காக வாதடுகிறார். இதனால் அவருக்கு எந்தவித பயனும் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு ஏற்படுவது வெறும் அவமானம் தான். அவரது பேச்சை யாரும் ஏற்காத காரணத்தால் மனவருத்ததில் செல்போன் டவரில் தற்கொலை செய்து கொள்கிறார். இது ப்ளாஷ்பேக் காட்சிகள்.

ரஜினியின் வசீகரன் கதாபாத்திரம் சொல்லும்படியாக இல்லை. ஆனால் ரஜினி தனது ரசிகா்களின் எண்ணத்தை பூர்த்தி செய்துள்ளார். அந்தளவுக்கு ஒவ்வொரு சீன்களிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிட்டி ரோபோ வரும் இரண்டாம் பாதியிலிருந்து படம் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

எமிஜாக்சன் நடிப்பிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். கிளாமர் மட்டும் பெயர் பெற்ற நாயகி எமிஜாக்சன் வசீகரனுக்கும், ரோபோவுக்கும் உதவி செய்யும் வகையிலும் மிரட்டி இருக்கிறார்.

மனுசன் அக்ஷயகுமார் என்னமா நடிப்பில் பின்னி பெடல் எடுத்தியிருக்கிறார். அவர் வயதான பறவைகளின் விஞ்ஞானி கேரக்டரில் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுக்கிறார். பறவை அருகில் வருவது, புல்லட் பறப்பது, 3டி தொழில்’நுட்பம் காட்சிகள் அழகாக இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு படத்தை அள்ளி தெறிக்க விட்டுகிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை செம. பின்னணி இசை காதுக்குள் ரீங்காரமாக ஒலிக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இந்தளவுக்கு படம் எடுக்க முடியும் என்பதை நிருபித்து இருக்கிறார். அதுவும் இறுதி காட்சியில் மிரட்ட வைத்தியிருக்கிறார். செல்போன்கள் பறப்பது, செல்போன்களில் மூலம் அட்டகாசமான காட்சிகளை அரங்கேற்றியிருக்கிறார்.

டெக்னாலஜி மூலம் செய்யும் அதிரடியும், கிராபிக்ஸ் காட்சிகளை மாஸாக நம்ம சூப்பர் ஸ்டாரை வைத்து செவ்வனே செய்திருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3டி டெக்னாலஜி மூலம் உருவாகி உள்ள இந்த படத்தை அனைவரும் கண்டுகளிக்கலாம்.