இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 2.0. இதற்கு முன் அவர் நடித்த எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் தயாராகி வருகிறது.

இப்படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அந்நிலையில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை, ஷங்கர் எடுத்து முடித்து விட்டார் என எமிஜாக்சன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிகிறது. இன்னும், இப்படத்தின் ஒரு முக்கிய காட்சியை எடுத்து விட்டதாகவும், ஒரு பாடல் காட்சி மற்றும் சில காட்சிகளை மட்டுமே எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த முக்கிய காட்சியை முடித்து விட்டு தனது படக்குழுவினரோடு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.