ரஜினிகாந்த் நடிப்பில் பல வருடங்களாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் 2.0. விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வரவிருக்கிறது.

இப்படத்தின் டீசர் முதல் முறையாக 3டியில் வரவிருக்கிறது இதற்காக இந்த டீம் கடுமையாக உழைத்து வருவதாக லைகா நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

3டியில் வெளியாகும் அதே நேரத்தில் எந்தெந்த தியேட்டரில் 3டியில் வெளியாகும் என்றும் யூ டியூபில் 2டியில் வெளியாகும் என லைகா செய்தி வெளியிட்டு உள்ளது.