அனுஷ்காவை ஒல்லியாக்க ரூ.2 கோடி செலவு செய்த ‘பாகுபலி 2’ தயாரிப்பாளர்

கடந்த வாரம் வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி உலகம் முழுவதும் பெரும் வசூலை தந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. குறிப்பாக தேவசேனா கேரக்டரில் நடித்து அனுஷ்காவின் இளமை குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘பாகுபலி 2’ படப்பிடிப்பின்போது அனுஷ்கா உடல் கொஞ்சம் குண்டாக இருந்தது. யோகா டீச்சராக இருந்தும் அனுஷ்காவால் உடலை மெலிய செய்ய முடியவில்லை. எனவே வேறு வழியில்லாமல் அனுஷ்காவை அதே உடலமைப்புடன் நடிக்க வைத்து கிராபிக்ஸ் மூலம் அனுஷ்காவை ஒல்லி ஆக்கிவிட்டாராம் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி. ஆனால் இதற்கு ஆன செலவு ரூ.2 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக கன்னாபின்னாவென்று உடல் எடையை ஏற்றிய அனுஷ்காவால் இன்னும் உடலை குறைக்க முடியவில்லை என்பது ‘பாகுபலி 2’ படத்தின் புரமோஷனின் போது அனுஷ்காவை பார்த்தபோது புரிந்து கொள்ள முடிந்தது.