தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பனின் மகனும் இயக்குனர் ஏ.எல் விஜயின் அண்ணனுமான உதயா நடித்து வரும் படம் உத்தரவு மகாராஜா 18 வருடங்களும் மேல் நடித்து வரும் உதயாவிற்கு இதுவரை திருப்புமுனை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த படமும் வரவில்லை.

திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய படங்களில் அந்த கால கட்டத்தில் இருந்தே நடித்து வந்திருக்கிறார். ஆரம்ப கட்ட படத்தில் இவருடன் இணையாக நடித்த பிரபு இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின் இணைந்து நடிக்கிறார்.

இருப்பினும் இப்போது ஆசிப் குரைசி இயக்கத்தில் நடித்து வரும் உத்தரவு மஹாராஜா படமாவது அவருக்கு திருப்புமுனையாக கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உத்தரவு மஹாராஜாவின் டிரைலர் அண்மையில் வெளியாகி அதை 2 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க காமெடிப்படமாகவும் த்ரில்லர் கலந்து உருவாகிறது.