வீராட்கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். உத்தரகாண்டில் இருக்கும் கோலி அனுஷ்காவுடன் புத்தாண்டை கொண்டாடுகிறார்.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் வீராட்கோலி. டெஸ்ட் கேப்டனான அவர் கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் ஜொலித்து வருகிறார்.இந்த ஆண்டு வீராட்கோலி ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் இந்த ஆண்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக ஜொலித்தார்.

வீராட்கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் தற்போது உத்தரகாண்டில் உள்ளனர். நேற்று அவர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.புத்தாண்டு வரை அவர் அனுஷ்கா சர்மாவுடன் உத்தரகாண்டில் இருப்பார். அங்கு தான் அவர் காதலியுடன் புத்தாண்டை கொண்டாடுகிறார்.

காதலியுடன் நன்றாக பொழுதை போக்கிய பிறகே அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார். பெங்களூரில் 5-ந்தேதி தொடங்கும் வீரர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்.

வீராட்கோலியின் வருகைக்கு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி ஹர்ஷ் ராவத் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோலி உத்தரகாண்ட் மாநில சுற்றுலா தூதுவராக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.