21 வருடத்துக்கு பின் இணையும் பிரபு,மோகன்லால்,பிரியதர்ஷன்

Prabhu joins Marakkar - Arabikadalinte Simham team

சுமார் 21 ஆண்டுக்கு முன் அதாவது கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்தது காலபாணி திரைப்படம்,தமிழில் சிறைச்சாலையாக வந்தது பிரபல மலையாள,தமிழ் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார்

பிரபு மோகன்லால் இணைந்து நடித்திருந்த இப்படம் சுதந்திரத்தின்போது அந்தமான் ஜெயிலில் சுதந்திர போராட்ட வீரர்கள் எவ்வாறு கொடுமைப்படுத்தப்பட்டனர் என்ற விஷயத்தை தாங்கி வந்தது.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின் இந்த கூட்டணி மரக்கார் அரபி கடலின்டே சிம்ஹம் என்ற படத்தில் மீண்டும் இணைகிறது.தமிழிலும் இப்படம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரியதர்ஷனின் கனவு படமான இது கடலுக்குள்ளேயே பெரும்பாலும் படப்பிடிப்பு நடக்கிறது.