சிம்புதேவன் படத்திற்காக ரிஸ்க் எடுக்கும் வடிவேலு


வைகைப்புயல் வடிவேலு நீண்ட காலங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தாா். தற்போது நீண்ட இடைவெளிக்கு பின் நடித்து வருகிறாா். லாரன்சுடன் சிவலிங்கா படத்தின் மூலம் தனது இன்னிங்சை துவக்கியுள்ளார்.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக  நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி தவிர மற்ற படங்கள் சொல்லும்படியாக இல்லை.  இந்த நிலையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டள்ளாா் இயக்குநா் சிம்புதேவன். அதில் வடிவேலு நடிக்கவுள்ளாா். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க இருக்கிறாா் வடிவேலு. தன்னை புதிய தோற்றத்தில் ரசிகா்கள் ரசிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 50 வயதை எட்டியுள்ள இவா் இப்படி ஒரு ரிஸ்க எடுக்கவிருக்கிறாா். ஹீரோ, ஹீரோயின்களை போல தனது உடல் எடையை குறைக்க இருக்கிறாா்.

இந்த படத்தின் மூலம் மீண்டும் வைகப்புயல் தமிழக திரையுலகில் வீசட்டும் என அனைவரும் எதிர்பார்ப்போம்