இயக்குனர் ஷங்கர் இயக்கி கடந்த 1993ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்  ஜென்டில்மேன், அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், சுபாஸ்ரீ, சரண்ராஜ், மனோரமா, நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்த படமிது.

கல்வி ஒருவனுக்கு மறுக்கப்படுவதையும், மெடிக்கல் காலேஜ் சீட்டை லட்சக்கணக்கில் கொடுத்து பெறுவதும் அதற்கு பின்னால் உள்ள அரசியலையும் மையமாக வைத்து இப்படம் வந்து அசுர வெற்றி பெற்றது.

அதற்கு முன் எஸ்.ஏ.சி, சூரியன் படத்தில் பவித்ரன் உள்ளிட்ட இயக்குனருடன் உதவியாளராக பணியாற்றிய சங்கர் இப்படத்தின் மூலம் இயக்குனராக வெற்றிக்கோட்டை தொட்டு இன்று தொட முடியாத இமயத்தில் நம்பர் 1 டைரக்டர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

பகலில் அப்பளம் போடும் கிச்சாவாகவும் இரவில் அதிரடி திருடராகவும் அர்ஜூன் இப்படத்தில் கலக்கி இருப்பார்.

அந்த நேரத்தில் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்த ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு போட்டு கொடுத்த பாடல்கள் அத்தனையும் ஹிட்டோ ஹிட்டு, குறிப்பாக ஒட்டகத்தை கட்டிக்கோ, சிக்கு புக்கு ரயிலு, உசிலம்பட்டி பெண்குட்டி, பார்க்காதே பார்க்காதே போன்ற அனைத்து பாடல்களையும் சொல்லலாம்.

படத்தின் மற்றொரு பலமாக கவுண்டமணி செந்தில் இருந்தனர் இவர்களின் அதிரடி சிரிப்பும் படத்திற்கு மற்றொரு பலமாக அமைந்தது.

சிறப்பான அதிரடி போலீசாக சரண்ராஜும், கவர்ச்சிக்காக சுபாஸ்ரீயும், சென் டிமெண்ட்டுக்காக மனோரமாவும்,நம்பியாரும் என அனைத்து அம்சங்களும் நிறைந்த படமானாதால் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது.

இப்படம் மூலம் மிகப்பெரும் புகழ்பெற்ற கே.டி குஞ்சுமோன் என்ற தயாரிப்பாளர் அதற்கு பின் நிறைய பிரமாண்ட படங்களை தயாரித்து பெரும் நஷ்டத்துக்கு உள்ளானார்.

25 வருட வெள்ளிவிழா கொண்டாடினாலும்

காலம் கடந்தும் ஜென்டில்மேன் இன்னும் பேசப்படும் என்பது உறுதி.

25 வருடத்தை தன் குருநாதர் கடந்து வெள்ளி விழா கொண்டாடியதால் ஷங்கரின் உதவியாளராக இருந்து இன்று இயக்குனர்களாக இருக்கும் அட்லி, ஹோசிமின், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் ஷங்கரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.