ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய மாஸ் திரைப்படமாக 26 ஆண்டுகளுக்கு முன் வந்ததுதான் அண்ணாமலை திரைப்படம்.

92ம் ஆண்டு ஜூன் 27 ரஜினி நடிக்க பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரிக்க மிகப்பெரிய மாஸ்டர் பளாஸ்டர் ஹிட் படமாக வெளிவந்து ஜெயித்தது இப்படம்.

ரஜினி,குஷ்பு,ராதாரவி,சரத்பாபு நடித்திருந்தார்கள்.ரஜினி இதில் நண்பனிடம் சவால் விட்டு பேசும் வசனம் மிகப்பெரும் புகழ்பெற்றது.

அதற்கு தேவா இசைத்த பின்னணி இசையும் புகழ்பெற்றது.

 

வைரமுத்துவின் அதிரடி மாஸ் பாடல்கள், அரங்கமே அதிர்ந்த சண்டைக்காட்சிகள். டைட்டில் தொடங்கி கடைசிவரை

ரஜினி வந்த ஒவ்வொரு காட்சிகளுக்கேற்ற தேவாவின் பின்னணி இசை என அரங்கமே அதிர்ந்த நாட்களை எண்ணி

சில நாட்களுக்கு முன்

ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பூரித்ததை காண முடிந்தது. அதற்கு #26YearsOfAnnamalai என்ற ஹேஷ் டேக்குகளை ரசிகர்கள் உருவாக்கி இருந்தனர்