நாட்டு மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது. முதலில் தீர்ப்பில் சாரம்சத்தை வாசித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒபிசைனி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளித்தார்.

எனவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம், சரத்ரெட்டி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இந்த தீர்ப்பால் தமிழகம் முழுவதிலும் உள்ள திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீர்ப்பு வெளியான சில நொடிகளில் சென்னை அறிவாலயத்தில் கூடியிருந்த திமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.